முத்தரப்பு ஒருநாள் போட்டி : ஜிம்பாவே அபார வெற்றி
முத்தரப்பு ஒருநாள் போட்டி : ஜிம்பாவே அபார வெற்றி
முத்தரப்பு ஒருநாள் போட்டி : ஜிம்பாவே அபார வெற்றி
UPDATED : ஜூன் 03, 2010 07:18 PM
ADDED : ஜூன் 03, 2010 12:35 PM
ஹராரே : ஜிம்பாப்வேயில் நடந்து வரும் முத்தரப்பு ஒருநாள் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா, ஜிம்பாப்வே அணிகள் மோதின.
டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி, இந்திய அணியை முதலில் பேட் செய்ய பணித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய ஜிம்பாப்வே அணி, 38.2 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஜிம்பாப்வே அணியின் டெய்லர் 74 ரன்களும், மசகட்சா 66 ரன்களும் எடுத்தனர். தொடர்ந்து இரண்டாவது முறையாக ஜிம்பாப்வேயிடம் இந்தியா பரிதாப தோல்வியை சந்தித்தது.